அறத்துப்பால் பாயிரவியல் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு
எழுத்துக்களெல்லாம் அகரத்தை (ஆனாவை) முதலாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல, உலகம், ஓன்றே ஆகிப் பலவாய்ப் பிரிந்தவனாகிய முழு முதற் கடவுளை முதல்வனாகக் கொண்டிருக்கிறது.
2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவினை உடைய இறைவனின் நல்ல அடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (ஒன்றுமில்லை)
3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
நினைப்பவர் மனமாகிய மலரில் அமரும் இறைவனின் சிறந்த அடிகளை இடைவிடாமல் நினைப்பவர், இந்நிலவுலகில் நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்.
4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமையால் விளையும் பெருந்துன்பங்களும் சேர்வதில்லை.
6. பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
ஐம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நெடுநாள் நிலைபெற்று வாழ்வர்.
7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றம் அரிது.
தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மன்க்கவலையை நீக்குதல் இயலாது.
8. அறஆழி அந்தண்ன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
அறக்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நிறைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது.
9. கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
எளிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை வணங்காத உடல்கள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயன்ற்றவையாகும்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க முடியாமல் அதனுள் அழுந்துவர்.
For reading Thirukkural visit; http://www.thirukkural.com/2009/01/1.html
To read more abour Thiruvalluvar visit: http://en.wikipedia.org/wiki/Thiruvalluvar
No comments:
Post a Comment