Friday, 23 March 2012

இந்தியர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருந்து வெளி வரவேண்டும்


இந்தியர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருந்து வெளி வரவேண்டும் - ஆக்கம் ஆர் கெங்காதரன் (ஆங்கிலம்), தமிழாக்கம் போகராஜ குமாரசாமி.

மலேசிய இந்தியர்கள் பிரச்சினை வலையில் சிக்கி அதிலிருந்து வெளியெற சிரமம்ப்படுகிறார்கள் என்பது உண்மையா? அல்லது அரசாங்கம் தனது முக்கியமான காரணங்களால் இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்திச் செய்ய அக்கறைக் கொள்ளவில்லையா? அல்லது இந்திய சமுதாயம் தனது பிரச்சினைகளை சுயமாக தீர்வு காண வேண்டும் என்று விட்டுவிட்டார்களா?

மலேசிய இந்தியர்கள் ஓட்டு மொத்தமாக அரசாங்த்திடம் முறையான வகையில் உதவி கேட்டுப் பெறலாம், ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் இரக்கத்தை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருந்து வெளி வரவேண்டியது அவசியம்,  ஏன் என்றால் இம்முறையில் (அரசாங்கத்தின் இரக்கம்) அமல் படுத்தும் வகையில் குறைப்பாடுகள் எற்படலாம்.

இந்திய சமுதாயம் தனது பிரச்சினைகளை சுயமாக தீர்வுகான வேண்டும். தனது சுய சிந்தனையின் மூலம் புதிய வழியின் கண்டு முன்னேற்றம் காண வேண்டும். தற்சமயம் பொருளாதாரத்தில் நல்ல வாய்ப்பினை உடையவர்கள் அந்த வாய்ப்பினை பயன் படுத்தி நன்றாக சாம்பாதிப்பதுடன், அந்த வருமானத்திலிருந்து ஒரு சிறிய பகுதியினை தங்களது உறவினர்கள் மற்றும் நமது சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.

தனி நபர்கள் ஒன்று பட்டாலே அந்த சமுதாயம் வலிமைப் பெறும் என்பதினை நினைவில் கொள்ளவும். தனி மனிதன் அக்கறை சமுதாய அக்கறையாக சம நிலை காண வேண்டும். நமது சமுதாயம் மதிக்க தக்க சமுதாயமாக வேண்டுமானல், நாம் நன்றாக, வளமாக வாழ வேண்டும். ஆகவே நாம் நமது சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களை தொடங்க வேண்டும்.

திரு. ஷாரிர் அபுதுல் சாமாட் அவர்களின் கருத்துப்படி இந்தியர்களின் பிரச்சினை சம சொத்துடமையை விட பெரியது, அதிகமான பிரச்சினைகள் சமூக தொடர்பானது, உதாரணம் குண்டர் கும்பல். இந்த நாட்டில் இந்தியர்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தாலும், அவர்களின் பங்கு அடைவு நிலையும் மற்ற பல துறைகளில் வியக்கத்தளவு இருக்கிறது.

மலேசிய தொழில் அதிபர் சாராள சுகுமாரன், தனது கருத்தினை இப்படி கூறுகிறார் "இந்தியர்களின் பின்தங்கிய நிலைக்கு பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று நாம் இங்கே சிறுபான்மை  மக்களாக இருப்பது. இரண்டாவது நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகள் நமது முன்னேற்றத் திற்காண வழிகளை ஊக்குவிக்கப்பதில்லை".

இந்த நாட்டில் இந்தியர் நாட்டின் பெருநிறுவன செல்வ நிலையில் 1.5% உள்ளதாக டைம் ஆசியா (2000 இல்) தனது  செய்தியில் கூறிப்பிட்டுள்ளது. அதேப்போல் 54% மலேசியா இந்தியர்கள் ஊதியம் பெறும் தோட்ட தொழிலாளர்கள் அல்லது நகர்ப்புற குறைந்த ஊதியம் பெறுவோராக உள்ளனர். (ஆசியா வாரம் ஜனவரி 26, 2002).
மேலும், இந்திய இளம் குற்றவாளிகள் 14% என்று முன்னாள் சுகாதார அமைச்சர் சுவா சாய் லேக் தெரிவித்துள்ளர். ஒவ்வொரு 100,000 தற்கொலைகளில் இந்தியர்கள்  21.1% உள்ளனர் (சடாத்துல் நாயிர் மற்றும் ரொஸ்லி - உத்துசன் மலேசியா செப்டம்பர் 12, 2007) மற்றும் எந்த சந்தேகமும் இல்லை இந்தியர்கள் மிக குறைந்த தனிநபர் வருமானம் மாதத்திற்கு 1,000 ரிங்கிட் மட்டுமே. (ஸ்டார் ஆன்லைன் செப்டம்பர் 30, 2005).

மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை மனதில் நிறுத்தி பார்த்தால், நம் மலேசிய இந்தியர்கள் நிலை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல, கட்டமைக்கப்பட்ட சீரான மற்றும் ஒரு விரிவான உடன்பாடான கொள்கை  இருக்கிறதா? (AT ஆன்லைன் அக் 19, 2005)ல் பரதன் குப்புசாமி அவர்கள் "சமூகத்தில் ஒரு சிறிய உயர் குழுவினர் வறுமை  வட்டத்திலிருந்து வெளியேற இந்த வளங்களை பயன்படுத்தி  பலன்  அடைந்துள்ளனர், ஆனால் பெரும்பாலானவர்கள் தப்பிக்க எந்த வழிகளும் இல்லை" என்கிறார்

மலேசிய இந்தியர்களில் குறைந்தது 80%  புளுக் கோலர் தொழிலாளர்கள், ஆற்றலில் இன்னும் நாம் படிப்படியாக தொடர்ந்து பின் தங்கிய வருகின்றனர். நாம் மக்கள் தொகையில் ஏறத்தாழ 10% உள்ளோம் மற்றும் மகிழ்ச்சியற்ற தகவல்ரு பாராளுமன்ற தொகுதியில் கூட இந்தியர் ஆதிக்கம் இல்லை (வி, கணபதி ராவ், ஜூலை 21, 2009 மலேசியகினி). மலேசிய இந்தியர்கள் சுமார் 7% வாக்காளர்கள் பதிவு பெற்ற போதும், அரசியல் பிரதிநிதித்துவம் வலு குன்றியதால் நாம் எந்த பயனுள்ள பலனையும் பெற்றிருக்கவில்லை. 

நான் நம்புகிறேன் நமது சமூக  அதிகமாக மனப்பான்மையில் ஏழையாக இருக்கிறார்கள். நாம் முன்னேற்றத்தில் உறுதியாக இருந்தால், நாம் ஒரு சமூகமாக நம் மனத் தட்டுகளையும் மாற்ற வேண்டும். நாம் தற்போதைய சமூக பொருளாதார இடைவெளிகளும் வேற்றுமைக்கு நிவாரணம் காண உண்மையாகவே ஆர்வமாக இருந்தால் வழங்கப்படும் தைரியமான புதிய வழிமுறைகளை பின்பற்ற தயாரா வேண்டும்.

நாம் அரசியலில் எதிர்க்க வேண்டியது, கூக்குரல் எழுப்ப வேண்டியதும் முறையற்ற இனம் சார்ந்த திட்டங்களே தவிர அரசாங்கத்தை எதிர்பதால் நாம் இலக்கை அடையப்போவது இல்லை.  ஏனெனில் சில ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகள், பொறுப்பற்ற அறிக்கைகள் மற்றும் சொல்லாட்சி விமர்சனங்களில், மலேசிய இந்தியர்கள் தாங்களே தங்கள் தற்போதைய விரும்பப்படாத மற்றும் பழிப்பு உண்டாக்குகிற நிலமைக்கு காரணம். எனது வாதம் வேலை செய்யும் இந்தியர்கள்  சொந்த எதிர்மறையான முன்னேற்றம் இல்லாத  கலாச்சாரமே காரணம் அதை விடுத்து வெளியே இருந்து எந்த பிரத்யேக காரணிகளும் இல்லை.

பல  ஆண்டுகள் மலேசிய இந்தியர்கள் வறுமை மற்றும் துன்பங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் தற்றபோதைய  சூழ்நிலையினை கண்டுக்கொள்ளாமல் இருகின்றனர். ஏ.வி. காத்தையா, ஒரு முன்னாள் தொழிற் சங்கவாதி கூறுகிறார், ". நாம் அரசால் மற்றும் இன்றி  நமது சொந்த இந்திய தலைவர்களாலும் வரம்பிற்குட்படுத்தப்பட்டு, மறக்கப்படுகிறோம். நாட்டின் கொள்கைகளை எவ்வாறு  வரையப்படுகிறது என்று அறியாமையால் நம் எதிர்காலம் உண்மையில் இருண்ட உள்ளது, 

பிறந்துள்ள 2012ம் ஆண்டில் மலேசிய இந்திய சமூகம் அரசாங்க உதவியை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருந்து தன்னை துண்டிக்க வேண்டும்.. நாம் ஒரு புதிய உத்வேக மற்றும் புரட்சிகர சிந்தனை தேவை. மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது மற்றும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நாம் சமூகத்தை மாற்றியமைக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. நாம் துடிப்பான, ஒளிமயமாக இருக்க விரும்பினால், நாம் பலவீனமாக இருக்கலாகாது நாம் பலவீனமாக இருந்தால் பல ஆபத்து மற்றும் தீங்கிழைக்கப்படுவதுடன் மற்றும் கூட கண்மூடித்தனமான சுரண்டலுக்கும் ஆளாக்கப் படுவோம்.

நமது சமூகத்தை கோழையாகவும் மற்றும் மிரட்டலுக்கும் அனுமதிக் கூடாது. நாம் நமது  சமூகத்தை ஏமாற்றங்களும் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளும் இல்லாமையால் சீர் அழிவிற்க்கு அனுமதிக்க கூடாது. யாம்  உண்மையில் நமது சமூகம் 1957 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடினமான தருணங்களை கடந்து வந்த வழியினை ஒரு மதிப்பு மிக்க பாடம் கொள்ள வேண்டும்.

நாம் ஒருபோதும் நிலையான எதிர்காலத்தை விட்டுக்கொடுக்க கூடாது அப்போதுதான் நாம் துடிப்பான, பொறுப்பான சமூகமாக வாழ முடியும். மற்றும் தொடர்புடைய இருக்க முடியும். ஒரு சமூகத்தில் அசாதாரண சாதனைகளை அடைய நாம் திறன் மற்றும் அறிவார்ந்த திறனும் பெறுவது அவசியம்.

2012ம் ஆண்டில்  நம் சமூகத்தில் எல்லாவற்றையும் கணக்கிடும் நோக்கம் வேண்டும். அதாவது கணக்கிடல் தங்களை மற்றும் முக்கிய அடிப்படை நோக்கம் முறையாகவும் மற்றும் திருப்திகரமாக செயற்படுத்த வேண்டும்.

இக்கட்டுரை எழுத்தாளர் ஒரு வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஐஎஸ்ஏ காவலில் இருத்தவர்.

இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் வாசிக்க கீழ்ழுள்ள அகப்பக்க தொடர்புக்கு செல்லவும்

No comments:

Post a Comment