Thursday, 17 September 2015

உங்கள் அல்சைமர் ஆபத்தை குறைக்க 6 வழிகள்














(வேண்டுகோள் – இந்ந கட்டுரையினை மறு பதிப்பீடு செய்வோர் எனது புளோக் தகவலையும் இணைக்க கேட்டுக்கொள்கிறேன்(http://baalanjitrinity.blogspot.my/) . நன்றி)


அல்சைமர் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அல்சைமர் ஏற்படுவதற்கான வாய்ப்பை 65 வயதுக்கு பின்னர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று தெரிகிறது. 85 வயது பின்னர் அல்சைமர் ஏற்படுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட 50 சதவிகிதமாக உள்ளது.  முததுமையினை தவிர்க்க முடியாது என்றாலும், அல்சைமர் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க சில எளிய வழிமுறைகளை உள்ளன
1. உங்கள் சவால்களை எதிரகொள்ளுங்கள். வளர்ந்துவரும் மருத்துவ சான்றுகள் வாழ்நாள் முழுவதும் தூண்டுதலே உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை செல்கள் பராமரிப்பதை ஊக்குவிக்கிறது, நினைவாற்றல் இழப்பை தடுப்பதுடன் மற்றும் அதேவேளை கூட அல்சைமர் நோய் தடுக்கும் முக்கிய செயல்பாடாக உள்ளது என்று கூறுகிறது. சுவாரஸ்யமான வேலையினை (பணம் அல்லது தன்னரவ அடிப்படையில்) செய்தல், உற்சாகமாக சமூக வாழ்க்கை ஈடுபடுவதுடன், பொழுதுபோக்கு நிகழச்சிகளை தொடர்வது, இசை அல்லது மொழி பாடங்களை பயில்வது,அல்லது ஒரு புதிய கணினி நிரல் கற்றலும் அல்சைமர் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க உதவும்

2. தினசரி ஒரு குறைந்த அளவான ஆஸ்பிரின் சாப்பிடுவது. சில ஆய்வுகள் ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு அற்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID அல்சைமர் ஏற்படும் அபாயம் குறைக்கும் என்று கூறுகிறது.

3. உங்கள் சமையலில் மசாலா பொருட்களின் சிகிச்சை முறை.  மஞ்சள், இஞ்சி மற்றும் சிவப்பு மிளகு போன்ற மசாலா பொருட்களை உணவுகளில் சேர்ப்பதால் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மற்றும் இயற்கை எதிர்ப்பு இன்ஃப்ளமேட்டரிகளாக செயல்படுகிறது.

4. ஒமேகா-3 நிறைந்த ஒரு உணவுகளை சாப்பிடவும் அவை அலாஸ்கா சால்மன், மத்தி, புதிதாக இடுக்கப்பட்ட ஆளிவிதை மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவையாகும்

5.உங்கள் உணவில் புதிய, கரிம பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.


6. உங்கள் உணவில் குறைக்க அல்லது தவிரக்க வேண்டியவை பாலியன்சேச்சுரேட்டட் தாவர எண்ணெய்கள் (அத்தகைய சூரியகாந்தி, சோளம் மற்றும் குசம்பப்பூ எண்ணெய் போன்றவை). அதற்கு பதிலாக கூடுதல் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

ஆக்கம் - டாக்டர் வெய்ல்  
தமிழாக்கம் – போகராஜா குமாரசமி
சான்றளிக்கப்பட்ட ஆரோக்கிய ஆலோசகர்
17/9/2015

Saturday, 15 August 2015

நீரிழிவு நோயிக்கான 12 எச்சரிக்கை அறிகுறிகள்!



                                                                                   




இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதோடு இந்த எச்சரிக்கை அறிகுறிகள் புறக்கணிக்க வேண்டாம்!

நீரிழிவு ஒரு வளர்சிதைமாற்ற நோய். அதன் குணாதிசயம் இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) உயர்ந்த அளவு இருப்பதாகும் 

இந்த நீரிழிவுக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை கவனத்தில் கொண்டு உடனடியாக

உங்கள் மருத்துவரரிடம் கலந்தலோசிப்பதன் வழி இந்த நோயின் தாக்கத்தை தவிர்க்க முடியும் 


1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா)
2. அதிகப்படியான தாகம் (பாலிடிப்ஸீயா)
3. அதிகரித்த பசி (பாலிபகீயா)
4. உலர்ந்த வாய்
5. காரணங்கள் இல்லா எடை குறைதல் அல்லது எடை அதிகரித்தல்
6. களைப்பு
7. பார்வை பிரச்சனைகள்
8. தலைவலி
9. குணமாகாத தொற்று நோய்கள், வெட்டு மற்றும் காயங்கள்.
10. ஈஸ்ட் எனப்படும் நுரைமம் தொற்று நோய்.
11. கைகள் மற்றும் கால்களில் உள்ள உணர்விழப்பு மற்றும் கூச்ச உணர்வு
12. உங்களுக்கு உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

நீங்கள் இந்த அறிகுறிகளில் சில வற்றை உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால்,

விரைந்து ஒரு மருத்துவரை கலந்தலோசிக்கவும் மற்றும் ஒரு இரத்த சோதனை செய்து நீங்கள் உண்மையில் வகை 2 நீரிழிவால் பாதிகப்பட்டுள்ளீரகளா என்பதை உறுதி செய்யுங்கள். 

ஆக்கம்

போகராஜா குமாரசாமி
சான்றளிக்கப்பட்ட ஆரோக்கிய ஆலோசகர்


அன்பார்ந்த வாசகர்களே, ஒரு வேண்டுகோள், இன்று பலர் மற்றவர்களின் படைப்பை எடுத்து தனது படைப்பு போல் மற்ற இணையாதளங்களுக்குஅனுப்புகிறார்கள். இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரையினை மறு பதிப்பீடு செய்ய விரும்பினால். 
இந்த இணைதளத்திலிருந்து பெறப்பட்டது என்று எழுதவும். நன்றி